தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காக்கி உடையில் இருக்கும் பணியாளர்களுக்கு உதவும் ரோஹித் ஷெட்டிக்கு நன்றி - மும்பை காவல்துறை - மும்பை மாநகர காவல் துறை

மும்பை: இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு மும்பை காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ரோகித் ஷெட்டி
ரோகித் ஷெட்டி

By

Published : Jul 13, 2020, 8:35 AM IST

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இந்தப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.

பாலிவுட் ஆக்‌ஷன் மசாலா படங்களுக்கு பெயர்பெற்ற ரோஹித் ஷெட்டி 'கோல்மால்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'சிங்கம்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இவரது இயக்கத்தில் அக்ஷய குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சூரியவன்ஷி' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான 11 ஹோட்டல்களை வழங்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி.

ரோஹித் ஷெட்டியின் இந்த சேவைக்கு மும்பை காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மும்பை காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் தொடர்ந்து காக்கி உடையில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்குத் உதவியை நல்கி வரும் ரோஹித் ஷெட்டிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மும்பை வீதிகளில் கரோனா பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எங்கள் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு ரோஹித் தனது 11 ஹோட்டல்களை வழங்கியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் குறும்படம் "ஆர்டிகள் 497 கள்ளக்காதல்"

ABOUT THE AUTHOR

...view details