தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு - கங்கனா ரனவத் புதிய படங்கள்

மும்பை: பிரிவினைவாத கருத்துகளை சமூக வலைதளத்தில் பரப்புவதாக கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு பாந்த்ரா பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கனா
கங்கனா

By

Published : Oct 17, 2020, 3:14 PM IST

காஸ்டிங் இயக்குநரும் உடற்பயிற்சியாளருமான முனாவ்வர் அலி சயீத் பாந்த்ரா பெருநகர நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், "கங்கனா ரனாவத், அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் சமூக வலைதளங்களில் பிரிவினைவாதம் ஏற்படுத்தும்விதமாக கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இதனால் சமூகங்களிடையே பிரிவுகள் உருவாகி வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாநில காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details