தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

துபாய் காதலனை கரம்பிடிக்க தயாராகும் 'நாகினி' - மெளனி ராய் திருமணம்

இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது காதலனை யார் என்பதை வெளி உலகுக்கு காட்டிய மெளனி ராய், விரைவில் திருமணத்துக்கு தயாராகவுள்ளாராம்.

actress mouni roy
நடிகை மெளனி ராய்

By

Published : Mar 16, 2021, 7:06 PM IST

ஹைதராபாத்: துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை விரைவில் கரம் பிடிக்க உள்ளாராம் நாகினி நடிகை மெளனி ராய்.

டிவி நடிகையான மெளனி ராய் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் தொழிலதிபருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அவரது குடும்பத்தினரோடு இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்த மெளனி ராய், சுராஜின் பெற்றோரை தாய், தந்தை என குறிப்பிட்டிருந்தார். சுராஜ்தான் தனது காதலர் என்று இந்தப் பதிவுகளின் மூலம் அவர் உறுதிப்படுத்தினார்.

இதைக்கண்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்களும் காதல் வலையில் மெளனி ராய் திருமணம்வரை கிசுகிசுக்க தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து தற்போது மெளனி ராய் திருமணம் தொடர்பாக மற்றொரு தகவல் கசிந்துள்ளது. மெளனி ராயின் தாயார் சுராஜ் பெற்றோரை சந்தித்து, திருமணம் குறித்து பேசியுள்ளாராம். இந்த சந்திப்பு மெளனியின் நெருக்கமான தோழியும் பாலிவுட் நடிகையுமான மந்திரா பேடி இல்லத்தில் நிகழ்ந்தது எனக் கூறப்படுகிறது.

எனவே விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மெளனி ராய் தற்போது அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பிர் கபூர், நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடிக்கும் பிரமாஸ்த்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். டிவி தொடரான நாகினி மூலம் பாம்பாக தோன்றி இந்தியா முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் த்ரிஷாவின் 'பரமபதம்'!

ABOUT THE AUTHOR

...view details