ஜகன் சக்தி இயக்கத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘மிஷன் மங்கள்’. இதில் டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று வெளியான இத்திரைப்படம் ரூ. 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படங்களில், ‘மிஷன் மங்கள்’ திரைப்படம் அதிக வசூலில் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ரூ. 200 கோடி தாண்டிய வசூல் - ‘மிஷன் மங்கள்’ செய்த புதிய சாதனை! - வித்யா பாலன்
அக்ஷய் குமார், வித்யா பாலன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘மிஷன் மங்கள்’ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
Mission Mangal
அதேபோல் வேகமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘மிஷன் மங்கள்’ நான்காவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது சாஹித் கபூரின் ‘கபீர் சிங்’ திரைப்படமாகும்.
’மிஷன் மங்கள்’ படத்தின் வெற்றி குறித்து அக்ஷய் குமார், இந்தத் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு. உங்கள் அன்பாலும் ஆதரவாலும் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.