இந்தி சினிமாவின் தேவதாஸ் என்றறியப்பட்ட நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 7) உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தியும் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திலீப் குமாருக்கு முன், திலீப் குமாருக்கு பின் என்றுதான் இந்திய சினிமாவின் வரலாறு என்றும் எழுதப்படும்.
அவரது மறைவு தந்த துக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய, அவரது இழப்பை அவர் குடும்பத்தினர் தாங்கிக் கொள்ள எனது பிரார்த்தனைகள். பெரும் சோகத்தில் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூ. 1.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமிதாப் பச்சன்