தமிழில் அர்ஜூன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்களோடு தமிழ் படங்களில் நடித்தவர் மீரா சோப்ரா. இவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர். தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கும் இவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ’டபுள் ட்ரீ’ (Double Tree) என்னும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவு சாப்பிடுவதற்காக நடிகை மீரா சோப்ரா சென்றுள்ளார். அப்போது அவர் ஆர்டர் செய்த உணவில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சயடைந்துள்ளார்.
உணவில் புழு: அதிர்ச்சியில் நடிகை - அகமெதாபாத்
தான் சாப்பிட்ட உணவில் புழு இருந்தது என்று நடிகை மீரா சோப்ரா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
meera chopra
இதையடுத்து உணவில் உயிரோடு புழு இருந்ததை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.