தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

27 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ‘டூயட்’ மீனாட்சி - மீனாட்சி சேஷாத்ரி

என் குடும்பத்துக்காகவும் குழந்தைகாகவும் நான் இந்த முடிவை எடுத்தேன். தற்போது என் மகள் வளர்ந்து வேலைக்கு சென்றிவிட்டாள், என் மகன் கல்லூரியில் சேரவிருக்கிறான். எனவே நான் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/20-June-2021/12200368_153_12200368_1624179514238.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/20-June-2021/12200368_153_12200368_1624179514238.png

By

Published : Jun 20, 2021, 3:44 PM IST

ஹைதராபாத்: தமிழில் ‘டூயட்’ படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி சேஷாத்ரி, 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார்.

Meenakshi Seshadri

80-களில் பிரபலமாக இருந்த பாலிவுட் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. இவர் தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘டூயட்’ படத்தில் நடித்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு காணாமல் போன நடிகைகளில் இவரும் ஒருவர்.

1983ஆம் ஆண்டு மனோஜ் குமார் தயாரிப்பில் வெளியான ‘பெயின்டர் பாபு’ எனும் படத்தின் வாயிலாக திரையுலகுக்கு அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான சுபாஷ் காயின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் கவனத்தை பெற்றார். 1995ஆம் ஆண்டு ஹரிஸ் மைசூர் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார்.

Meenakshi Seshadri

தற்போது இவர் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தனியார் தினசரிக்கு பேட்டியளித்த மீனாட்சி, நான் திருமணம் செய்ய முடிவெடுத்தவுடன், நடிப்பது கடினமாக இருக்கும் என எண்ணினேன். அதனால்தான் நடிப்பதை நிறுத்தினேன். என் குடும்பத்துக்காகவும் குழந்தைகாகவும் நான் இந்த முடிவை எடுத்தேன். தற்போது என் மகள் வளர்ந்து வேலைக்கு சென்றிவிட்டாள், என் மகன் கல்லூரியில் சேரவிருக்கிறான். எனவே நான் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

Meenakshi Seshadri

இதுகுறித்து சில இயக்குநர்களிடம் பேசினேன். நான் நடிப்பதாக இருந்தால், நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர். எனவே நான் நடிக்க தயாராகிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளங்களின் வருகையால் பலருக்கும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நம் ‘டூயட்’ மீனாட்சி மீண்டும் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details