இது குறித்து ஷிபானி தனது இன்ஸ்டா பக்கத்தில், எனக்கு ரியாவை பல ஆண்டுகளாக தெரியும். அவரும் அவரது குடும்பத்தாரும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர்கள். ஆனால், அவர்கள் தற்போது மிக மோசமான சூழலை சந்தித்துவருகின்றனர். ஊடகங்கள் ரியாவை தவறாக சித்தரிக்கும் பணியை செய்து வருகின்றன. அந்த அப்பாவி குடும்பத்தை மனதளவில் சித்ரவதை செய்கின்றன.
ஊடகங்கள் ரியாவை தவறாக சித்தரிக்கின்றன - ஷிபானி தண்டேகர் - சுஷாந்த் சிங் வழக்கு
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ரியாவுக்கு ஆதரவாக நடிகை ஷிபானி தண்டேகர் எழுதிய பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவர்களின் அடிப்படை மனித உரிமையை பறிக்கும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. பத்திரிகைத் துறை மரணமடைந்ததை கண்கூடாக பார்க்க முடிகிறது. என்ன தவறு செய்தார் ரியா, ஒருவனை காதலித்ததைத் தவிர. என்னை மன்னித்துவிடு ரியா, நீ உன் வாழ்க்கையில் செய்த சிறந்த விஷயம் (சுஷாந்த்தை நேசித்தது) உனக்கு மிக மோசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. என்னை மன்னித்துவிடு, நான் எப்போதும் உனக்கு துணையிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு திரைத்துறை பிரபலங்கள் மலைக்கா அரோரா, ரசிகா டுகல், மான்வி கக்ரூ உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.