பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், சயிஃப் அலி கான், கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் 'தனாஜி: தி அன்சங் வாரியர்'. மராட்டியப் பேரரசில் ராணுவ தலைமைப் பொறுப்பு வகித்த தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
உண்மைக் கதையை சாரம்சமாகக் கொண்ட இப்படத்தில் அஜய் தேவ்கான், தனஜி என்கிற போர் வீரராக வருகிறார். இது இவரது 100ஆவது திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையில் இணைந்து அவருடன் பல போர்களில் ஈடுபட்ட தனாஜியின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்மாநில அரசு வரி சலுகை அளித்து உத்தரவிட்டுள்ளது.