ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார்.
ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ ஆக ஜோடி சேரும் லாஸ்லியா! - ஹீரோவாக நடிக்கும் ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Losliya
முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் - சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் முக்கிய கதபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும், இந்த படத்தை பி. ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.