நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
கரோனா தடுப்பு நிவராண நிதி வழங்கிய பாடகி லதா மங்கேஷ்கர் - பாடகி லதா மங்கேஷ்கர்
மும்பை: கரோனா தடுப்பு நிவராண நிதியாக ரூ . 7 லட்சத்தை பாடகி லதா மங்கேஷ்கர் மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
Lata
இந்நிலையில், பிரபல பாடகியும் பாரத் ரத்னா விருது வாங்கியவருமான லதா மங்கேஷ்கர் கரோனா தடுப்பு நிவராண நிதியாக மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 7 லட்சம் வழங்கியுள்ளார். லதா மங்கேஷ்கரின் இந்த செயலுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிரா தினம், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (மே 1) பொதுமக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.