மும்பை: இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் 93 வயதான பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அண்மையில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அவரச சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறார், அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1942ஆம் ஆண்டு தனது 13 வயதில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், இதுவரை பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐசியூவில் நைட்டிங்கேல்!