பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் முதல் திரைப்படம் 'குச் குச் ஹோத்தா ஹேய்'. இது 1998ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். இந்நிலையில், 20 வருடங்களுக்குப் பிறகு இப்படம் ரீமேக் செய்யப்படுமா என அதன் இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மீண்டும் வருகிறது ஷாருக்கானின் காதல் காவியம்? - ரீமேக்
'குச் குச் ஹோத்தா ஹேய்' படத்தை ரீமேக் செய்தால் ரன்வீர், அலியா பட், ஜான்வி கபூர் ஆகிய மூவரைதான் நடிக்க வைப்பேன் என்று கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், 'குச் குச் ஹோத்தா ஹேய்' படம் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. 20 வருடங்களுக்கு பிறகும் அப்படத்தை மறக்காமல் கேள்வி எழுப்புவது மகிழ்ச்சியளிக்கிறது. 'குச் குச் ஹோத்தா ஹேய்' ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒருவேளை தற்போது ரீமேக் செய்தால் ஷாருக் கான், கஜோல், ராணி முகர்ஜிக்கு பதில் ரன்வீர், அலியா பட், ஜான்வி கபூர்தான் எனது தேர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார். இவரது இந்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.