மும்பை: சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட்டில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் தோழி ரியா மீது கங்கனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்ட, மறுபுறம் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த சூழலில் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்த சோனம் கபூரை கங்கனா விமர்சித்துள்ளார்.
கண்ணுக்கு கண் என்றால் உலகம் குருடாகி விடும் - சோனம் கபூர் - Sonam Kapoor as mafia bimbo
ஆத்திரமடைந்த கங்கனா, மாஃபியாக்களின் குழந்தைகள் ரியா போன்ற போதைப்பொருள் அடிமைக்கு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய போராட்டம் அப்படியல்ல என குறிப்பிட்டிருந்தார்.

கங்கனாவின் அலுவலகம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என மும்பை மாநகராட்சி அதை இடிக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிராக கங்கனா குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கங்கனா அலுவலகம் இடிக்கப்படுவதற்கு எதிராக நடிகை தியா மிர்சா ட்வீட் செய்திருந்தார். அதை ஷேர் செய்த சோனம் கபூர், கண்ணுக்கு கண் என்றால் உலகம் குருடாகி விடும் என்ற காந்தியின் பழமொழியை பதிவிட்டு கங்கனாவை குத்திக்காட்டியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, மாஃபியாக்களின் குழந்தைகள் ரியா போன்ற போதைப்பொருள் அடிமைக்கு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய போராட்டம் அப்படி அல்ல என குறிப்பிட்டிருந்தார். ரியாவுக்கு ஆதரவாக சோனம் தொடர்ந்து குரல்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.