ராஜ் மேத்தா இயக்கத்தில் வருண் தவான், அனில் கபூர், நீத்து கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் ’ஜக் ஜக் ஜீயோ’. கரண் ஜோகர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 17ஆம் தேதி சண்டிகரில் தொடங்கியது.
இந்தச் சூழலில், கதாநாயகன் வருண், இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவர் தவிர்த்து, மற்ற படக்குழுவினர் மும்பை திரும்பினர். தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.