தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேரளாவில் யானை கொலை - கடுமையான நடவடிக்கையை எதிர்நோக்கும் பிரபலங்கள் - வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமைகள்

கேரளாவில் யானையை பட்டாசு வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு ஹேஷ்டாக் கண்டனங்களும், விலங்குகள் பாதுகாப்பு குறித்து கருத்துகள் குவிந்து வரும் வேளையில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

 animal cruelty
Kerala elephant tragedy

By

Published : Jun 4, 2020, 6:49 AM IST

மும்பை: பட்டாசு வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை இறந்துபோன மனிநேயமற்ற சம்பவத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆலியா பட்:

மிகவும் பயங்கரமான சம்பவம். நாம் விலங்குகளின் குரலாக ஒலிக்க வேண்டும். இதை பார்க்கையி்ல் இதயம் நொறுங்கிப்போனது.

அனுஷ்கா ஷர்மா:

இதுபோன்ற சம்பவங்களால், விலங்குகள் மீது நடத்தப்படும் கொடுமைக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டம் தேவைப்படுகிறது.

ஷ்ரத்தா கபூர்:

எப்படி இதுபோன்ற விஷயங்கள் நிகழ்கிறது. இந்த காரியத்தை செய்தவர்களுக்கு இரக்கம் இருக்கிறதா? என் இதயம் இதைப் பார்த்து சிதைந்துவிட்டது. இதை காரியத்தை செய்தவர் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ரந்தீப் ஹூடா

மனித தன்மையற்ற விதமாக அன்னாசிப் பழத்தில் பட்டாசுகளை வைத்து கர்ப்பிணி யானைக்கு கொடுத்தது ஏற்புடையதல்ல. இந்த வேலையில் ஈடுபட்ட பாதகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வித்யூத் ஜாம்வால்

கரோனாவுக்கு பிறகான புதிய உலகில் இது தொடருமா? அந்த யானை யாரையும் தாக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. மனிதர்கள் மனிதநேயத்தை மறந்துவிட்டதால் எந்த காரணமும் இல்லாமல் இந்த யானை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்காக பார்க்காமல், இதுபோன்றவைகள் மீண்டும் நடக்காமல் நிறுத்த வேண்டும்.

ராஜ்குமார் ராவ்

இதுவொரு கொடூரமான சம்பவம். இதைச் செய்தவர்களை கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும்.

காட்டு யானை ஒன்று கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள கிராமத்தில் புகுந்துள்ளது. ஊருக்குள் காட்டு யானையைப் பார்த்த கிராமவாசிகள் சிலர், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். யானை அன்னாசி பழத்தை கடித்தபோது, அந்த வெடி வெடித்து அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் அருகிலிருந்த வெள்ளியாற்றில் இறங்கி ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்று பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், #JusticeForMotherElephant #StopcCrueltytToAnimals #AnimalCare போன்ற பல்வேறு ஹேஷ்டாக்குகளில் விலங்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details