ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்துவருபவர் கேட்டி பெர்ரி. மேலும், இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு கேட்டி வெளியிட்ட ‘ டீனேஜ் ட்ரீம்’ என்ற ஆல்ப பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. இதனால், இவருக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது.
அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் 'அமெரிக்கன் ஐடல்' நிகழ்ச்சியில் ஞயிற்றுக் கிழமை ஒளிப்பரப்படும் எபிசோடுக்காக கேட்டி பெர்ரி சிறப்பு நடுவராக கலந்துகொண்டார். கேட்டியுடன் லூக் பிரையன், லியோனல் ரிச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செட்டிலிருந்து புரேப்பேன் வாயு கசிவு காரணமாக கேட்டி தலைசுற்றி கீழே விழுந்தார். இதனால் அங்கு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருந்தது.