தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கத்ரீனா கைஃப் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு! - கத்ரீனா கைஃப் புதியப் படங்கள்

மும்பை: கத்ரீனா கைஃப் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Katrina
Katrina

By

Published : Dec 8, 2020, 4:41 PM IST

நடிகை கத்ரீனா கைஃப், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதனையடுத்து கத்ரீனா கைஃப் தனது நண்பரான அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

தற்போது இந்த படத்திற்கு 'சூப்பர் சோல்ஜர்' (Super Soldier) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அபுதாபி, துபாய், போலந்து, ஜார்ஜியா, உத்தரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படம் குறித்தான அறிவிப்பை அலி அப்பாஸ் ஜாபர் ஜூன் மாதம் கூறுகையில், சர்வதேச அளவிலான ஆக்ஷன் நிறைந்த படத்திற்கு பொருத்தமான துணிச்சலான பெண் காதபாத்திரத்தை தேடுவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கத்ரீனா கைஃப்பை இந்த படத்தில் நடிக்க அணுகினார்.

அலி அப்பாஸ் ஜாபர் - கத்ரீனா கூட்டணி ஏற்கனவே மேரே பிரதர் கி துல்ஹான், டைகர் ஜிந்தா ஹை, பாரத் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details