தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரௌடி பேபி' பாடலுக்கு குழுவினருடன் குத்தாட்டம் போடும் பிரபல நடிகர்! - பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடனமாடும் வீடியோ

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'மாரி-2' திரைப்படத்தின் 'ரௌடி பேபி' பாடலுக்கு பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Rowdy Baby
Rowdy Baby

By

Published : Aug 10, 2021, 5:36 PM IST

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்து வெளியான திரைப்படம் 'மாரி-2'. இந்தத் திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இத்திரைப்படத்தின் 'ரௌடி பேபி' பாடல் திரைப்படம் வெளியானதில் இருந்தே ட்ரெண்டிங்கில் இருந்துவந்தது.

பிரபுதேவா நடன இயக்குநராக பணிபுரிந்த அந்தப் பாடலை நடிகர் தனுஷும், பாடகி தீயும் பாடியிருந்தனர். படத்தின் நடனம், இசைக்காகவே யூ டியூபில் பலராலும் ரசிக்கப்பட்டது.

குறிப்பாக சாய் பல்லவியின் நடனத்திற்கு தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவில் ரசிகர்கள் உருவெடுத்தனர். வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று அவர்களையும் இப்பாடல் ஆட்டம் போட வைத்தது.

மேலும் இப்பாடல் நூறு கோடிக்கும் அதிகமானோர் பார்த்த தென்னிந்திய பாடல் என்ற பெருமையை 'ரௌடி பேபி' யூ டியூப்பில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இப்பாடலுக்கு பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடன இயக்குநர்கள் ஷாஜியா சாம்ஜி, பியூஷ் பகத்துடன் இணைந்து 'ரௌடி பேபி' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கார்த்திக் ஆர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 300 மில்லியன்... சாய் பல்லவி பாடல் மூன்றாவது முறையாக சாதனை!

ABOUT THE AUTHOR

...view details