கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸுக்கு உத்தரவிட்ட கோர்ட்! - கங்கனா ரனாவத் மீது வழக்கு
பெங்களூரு: விவசாயிகளை களங்கப்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வேளாண் மசோதாக்கள் குறித்தான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரின் இந்த ட்விட்டை டேக் செய்து கங்கனா ரணாவத் ட்விட்டர் பக்கத்தில், “தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்ற பழமொழி உண்டு.
அதுபோல ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றி விடலாம். ஆனால் அனைத்தும் தெரிந்தவர்கள் வேண்டுமென்றே போராடுவதை நம்மால் மாற்ற முடியாது.
குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த குடிமகனும் வெளியேற்றபடாத நிலையில், அதனை வைத்து வன்முறைகள், வெறியாட்டங்கள் உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தான் தற்போது இந்த மசோதாக்களுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்று பதிவிட்டிருந்தார்.
கங்கனாவின் இந்த ட்வீட்டால் சமூக வலைதள பக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.