திறன் மேம்பாட்டு நிறுவனமான க்வான், தனது பணியாளர்கள் மூலம் நடிகர், நடிகைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய கரிஷ்மா பிரகாஷ், நடிகை தீபிகா படுகோனின் மேனேஜராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் தீபிகாவுடன் கரிஷ்மாவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டார்.
KWAN நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த தீபிகா மேனேஜர் - தீபிகா
திறன் மேம்பாட்டு நிறுவனமான க்வானில் (KWAN) இருந்து தீபிகாவுக்கு மேனேஜராக பணிபுரிந்த கரிஷ்மா பிரகாஷ் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த சூழலில், க்வான் நிறுவனத்திலிருந்து கரிஷ்மா ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து க்வான் நிறுவனத்தின் தலைமை அலுவலர் விஜய் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபர் 21ஆம் தேதி கரிஷ்மா தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனி க்வான் நிறுவனத்திற்கும் கரிஷ்மாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் நிறுவனத்தால் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் தீபிகா உள்பட எந்த நடிகரோடும் அவருக்கு தொடர்பு இல்லை. இதனை ஊடகங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை, பாலிவுட்டில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.