தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவர் நடித்த படத்தை 8 முறை பார்த்தேன் - காதல் ஈர்ப்பு பற்றி கரீனா! - ராகுல் ராய்

நடிகை கரீனா கபூரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Kareena Kapoor

By

Published : Aug 29, 2019, 1:34 PM IST

Updated : Aug 29, 2019, 1:51 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' நிகழ்ச்சியில் கரீனா கபூர் நடுவராக உள்ளார். இந்நிகழ்ச்சிக்காக கரீனா கபூர் ஃபேஷனாக உடை அணிந்து வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கரீனா கபூர் ஃபேஷன் உடை

மேலும், இந்த நிகழ்ச்சியின்போது அவரிடம் கேள்வி ஒன்று கேட்டப்பட்டது. அந்த கேள்வியும் தற்போது நெட்டிசன்களின் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

தன்னுடைய முதல் காதல் ஈர்ப்பு யார் மீது இருந்தது என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கரீனா கபூர், நடிகர் ராகுல் ராய் மீதுதான் முதல்முறையாக காதல் ஈர்ப்பு வந்ததாகவும், அவர் நடித்த ’ஆஷிக்’ திரைப்படத்தை எட்டு முறை பார்த்தாகவும் தெரிவித்தார்.

Last Updated : Aug 29, 2019, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details