பாலிவுட் முன்னணி பிரபலங்களான சைஃப் அலிகானும் கரீனா கபூரும் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். தற்போது கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
திருமண நாளை ஒட்டி கரீனா கபூர்தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருமண வாழ்வின் ரகசியத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர் - கரீனா கபூர் திருமண நாள்
புதுடெல்லி: கரீனா கபூர் தனது மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சைஃப் - கரீனா கபூர்
அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஒரு காலத்தில் பெபூ என்ற பெண்ணும், சைஃபு என்ற ஒரு பையனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசித்தார்கள்...மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கான திறவுகோல் எதுவென்று" எனக் கூறினார்.
Last Updated : Oct 16, 2020, 4:59 PM IST