நடிகை கரீஷ்மா கபூர் நீண்ட இடைவேளைக்கு பின் 'மெண்டல்ஹுட்' என்னும் இணையத்தொடரில் நடித்துள்ளார். ஏக்தா கபூர் தயாரித்துள்ள இந்தத் தொடர் மார்ச் 11ஆம் தேதி இணையத்தில் ஒளிப்பரப்பாகிறது. இதன் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கரீஷ்மா கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கரீனா கூறுகையில், நீண்ட இடைவேளைக்கு பின் கரீஷ்மா இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக நானும் கரீஷ்மாவும் ஒரு படத்தில் இணைந்து பணியற்ற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இதுவரை சரியான திரைக்கதை அமையவில்லை. யாரவது சரியான திரைக்கதை வைத்திருந்தால் என்னிடம் வந்து கூறலாம். எனக்கு அது திருப்திகரமாக இருந்தால் நிச்சயம் கால்ஷீட் வழங்குவேன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கரீனா கரீஷ்மா நீண்ட இடைவேளைக்கு பின் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கரீஷ்மாவை திரையில் பார்க்க இருக்கிறேன். தற்போது கரீஷ்மா பதற்றத்தில் இருக்கிறார். காரணம் நீண்ட இடைவேளை. அவரது மனநிலையை பெருத்து 'மெண்டல்ஹுட்' வலைத்தொடரும் அமைந்துள்ளது. 'மெண்டல்ஹுட்' அனைத்து தாய்மார்களுக்கு பெருந்தமான ஒரு இணையத்தொடர், என்றார்.
இவரைத்தொடர்ந்து கரீஷ்மா பேசுகையில், மெண்டல்ஹுட் இணையத்தொடரை நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள். ஏன்னென்றால் இந்தத் தொடர் தாய்மார்களும் மக்களும் சந்திக்கும் எமோஷ்னலை பிரதிபலிக்கும். அதுமட்டுமல்லாது மெண்டல்ஹுட் தொடரை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்பணம் செய்கிறேன் என்றார்.
45 வயதான கரீஷ்மா 2012ஆம் ஆண்டு விக்ரம் பாட்டின் இயக்கத்தில் வெளியான 'டேஞ்சரஸ் இஷ்கில்' நடித்திருந்தார். கிட்ட தட்ட 8 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் இந்த தொடரில் நடித்துள்ளார்.