பாலிவுட் நடிகை கரீனா கபூர் தற்போது ஆமீர் கானுடன் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, கரீனா கபூர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நேரம் செலவழித்து வருகிறார்.
'நம்பிக்கையை இழக்காதீர்கள்' - கரீனா கபூர் - ரசிகர்களுக்கு நம்பிகையுட்டிய கரீனா
மும்பை: பொதுமக்களும் ரசிகர்களும் தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என நடிகை கரீனா கபூர் வலியுறுத்தியுள்ளார்.
Kareena Kapoor
இந்த நேரத்தில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கரீனா கபூர், தனது செல்ஃபியைப் பதிவிட்டு, "வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: லால் சிங் சத்தா: பயோ பபுளை பின்பற்றி ஆமிர் கான் படப்பிடிப்பு தொடக்கம்