பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் உடற்பயிற்சிக்கு பிறகான, ஒப்பனையற்ற தனது புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”அன்பான தேவையற்ற உடல் கொழுப்பே, சாவதற்கு நீ தயாராக இரு” என பதிவிட்டுள்ளார். கரீனாவின் இந்த புகைப்படத்திற்கு நடிகை சோனம் கபூர் உள்பட பலரும் எமோஜிக்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில், கரீனா தனது மகன் தைமூர் அலி கான், கணவரும் நடிகருமான சைஃப் அலி கான் ஆகியோரின் குறும்பான மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்தார்.