தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரீனா கபூரின் கர்ப்பிணிகளுக்கான புத்தகம் - Kareena Kapoor pen guide

கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் தான் கருவுற்றது முதல் குழந்தையை ஈன்றது வரையிலான அனுபவத்தை பாலிவுட் நடிகை கரீனா கபூர் புத்தகமாக வெளியிடவுள்ளார்.

Kareena Kapoor Khan to pen guide to pregnancy
Kareena Kapoor Khan to pen guide to pregnancy

By

Published : Dec 20, 2020, 5:34 PM IST

மும்பை:பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர தம்பதி சைஃப் அலிகான் - கரீனா, இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது கரீனா மீண்டும் கருவுற்றிருக்கிறார். அவரது இரண்டாவது குழந்தை அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (டிசம்பர் 20) கரீனாவின் முதல் குழந்தை தைமூர் அலிக்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்கள் பயனடையும் வகையில், தனது கர்ப்ப கால அனுபவம் மற்றும் உடல்நலக் குறிப்புகளை புத்தமாக வெளியிடவுள்ளார். ஜக்கர்நெட் புக்ஸ் இந்த புத்தகத்தை பதிப்பிக்க உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்ட கரீனா, இந்த புத்தகத்தை உங்களுக்கு படிக்கக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த புத்தகத்துக்கு ‘பிரெக்னன்சி பைபிள்’ என பெயரிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details