உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புதிய வருடத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கரீனா கபூர்! - கரீன கபூர் இன்ஸ்டகிரம்
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் 2021ஆம் ஆண்டுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த தேசிய ஊரடங்கால் பொது மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். தற்போது சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எப்போது முடிவடையும் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் இந்த வருடத்தை வெறுப்பதாகவும் கூறியுள்ளனர்.
அந்த வகையில் நடிகை கரீனா கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில், 2021ஆம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன் எனக்கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் 2021ஆம் ஆண்டுக்காக காத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வருடம் வேகமாக முடிவடைந்து புதிய வருடத்தை வரவேற்க பலரும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.