தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யுனிசெஃப்பின் பணிகளுக்கு ஆதரவு தெரிவித்த 'ஒன் லவ்' கரீனா கபூர் - குழந்தைகளை காக்கும் பணியில்யுனிசெப்

நியூயார்க்: கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான யுனிசெஃப்பின் பணிகளை ஆதரிப்பதற்காக, நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் மறைந்த பாப் மார்லியின் 'ஒன் லவ்' ஆல்பத்தின் மறு வடிவமைப்பு இசை வீடியோ வெளியீட்டில் தோன்றியுள்ளனர்.

கரீனா கபூர்
கரீனா கபூர்

By

Published : Jul 18, 2020, 10:42 PM IST

கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், அதிலிருந்து மீண்டு சிறந்த உலகத்தில் வாழ்வதற்கான பணியை யுனிசெஃப் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மறைந்த பாப் மார்லியின் 'ஒன் லவ்' மறு வடிவமைப்பு இசை வீடியோ பதிப்பை வெளியிட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த முயற்சி அவரை கௌரவிக்கும் ஒன்று எனவும் அவர்கள் தெரிவித்தனர். பாப் மார்லியின் 75 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பிரேசில், காங்கோ,
இந்தியா, ஜமைக்கா, மாலி, நியூசிலாந்து, நைஜீரியா, சூடான், சிரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த இசை வீடியோவை வெளியிட்டனர்.

இந்த இசை வீடியோவில் பாலிவுட் நடிகை கரீனா கபூரும் இடம்பெற்றுள்ளார். இவருடன் மார்லி குடும்ப உறுப்பினர்களான ஸ்டீபன் மார்லி, செடெல்லா மார்லி மற்றும் ஸ்கிப் மார்லி உள்ளிட்ட பலர் தோன்றி உள்ளனர்.

இதுகுறித்து கரீனாகபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "#OneLoveOneHeart அனைவருக்கும் ஒரு சிறந்த உலகத்தை பெற நாம் மறுபரிசீலனை செய்யும் ஒரு முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.அடுத்த ஆறு மாதங்களில் இந்த உலகப் பெருந் தொற்றுநோயைத் தடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்று யுனிசெஃப் கூறுகிறது. பள்ளிகள் மூடல், உணவுப் பற்றாக்குறை, அடிப்படை சுகாதாரம், சரியான மருத்துவ முறை, உள்ளிட்டவைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பல நாடுகளுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் அங்கு இருக்கும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த இசை வீடியோ மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சோப்பு, முகமூடிகள், கையுறைகள், சுகாதாரக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என, யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details