பாலிவுட் முன்னணி பிரபலங்களான சைஃப் அலிகானும், கரீனா கபூரும் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். தற்போது கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
செட்டில் நாங்கள் இருவர்: தாய்மையை போற்றும் கரீனாவின் கர்ப்ப செல்ஃபி! - கரீனா கபூர் லேட்டஸ் செய்திகள்
ஹைதராபாத்: கர்ப்பத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள கரீனா கபூர் தற்போது செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kareena
இந்நிலையில் விளையாட்டு பிராண்டுக்கான விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொண்ட கரீனா கபூர், இளஞ்சிவப்பு நிற விளையாட்டு உடைகளில் கர்ப்பமாக இருக்கும் செல்ஃபி ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதனுடன் ஒரே செட்டில் நாங்கள் இருவர் என பதிவிட்டார். இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரத்திலேயே சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.