மும்பை:பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூருக்கும், அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாவர்.
கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், இருவரும் மும்பையில் பல கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டதால் தொற்று உறுதி செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரீனா கபூருக்கும், அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கரீனா கபூரும் அம்ரிதா அரோராவும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெளியிட்டு தேதியை அறிவித்த ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா'!