தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வரப்போகிறது நல்ல செய்தி: நடனமாடியபடி மருத்துவமனைக்குள் நுழைந்த கரண்விர் போரா - கரண்விர் போரா

தொலைக்காட்சி நடிகர் கரண்விர் போரா தனது குடும்பத்தின் புது உறுப்பினருக்காக காத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், குழந்தைக்கான நாற்காலியுடன் நடனமாடியபடி மருத்துவமனைக்குள் நுழைகிறார்.

Karanvir Bohra
Karanvir Bohra

By

Published : Dec 20, 2020, 6:58 PM IST

ஹைதராபாத்: கரண்விர் போரா - டீஜே சிது தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறக்கவுள்ளது. டீஜே மருத்துவமனையில் உள்ளார், எந்த நேரத்திலும் நல்ல செய்தி வரலாம். தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்க கரண் காத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில், குழந்தைக்கான நாற்காலியுடன் நடனமாடியபடி மருத்துவமனைக்குள் நுழைகிறார். 2016ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு வியன்னா, பெல்லா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது குழந்தை பிறக்கப்போவது பற்றி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் அறிவித்திருந்தனர்.

கனடாவில் உள்ள மருத்துவமனையில் டீஜே அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் பாலினம் குறித்து முன்பே அனுமதி பெற்று இந்தத் தம்பதியர் தெரிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details