உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களும் பிரபலங்களும் நிதிகளை வழங்கிவருகின்றனர்.
இதையடுத்து, பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், கடந்த ஒரு மாதமாக நாம் அனைவரும் வீட்டில் இருந்து வருகிறோம். இந்த ஊரடங்கு உத்தரவுக்கு இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு உள்ளது. ஆனால் நாம் இந்த கரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்தால் மட்டுமே நாம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.