ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹனியா, பத்ரிநாத் கி துல்ஹனியா படங்களைத் தொடர்ந்து வருண் தவான், இயக்குநர் ஷஷங்க் கைடன் கூட்டணியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மிஸ்டர் லெலே.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் கரண் ஜோஹர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருண் தவான் உள்ளாடையில் தோன்றும்படியான இந்த போஸ்டர் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இதுகுறித்து வெற்றிகரமான துல்ஹனியா திரைப்படங்களில் இணைந்த வருண் தவான், இயக்குநர் ஷஷன்க் கைடன் குழு மீண்டும் இப்படத்திற்காக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இத்திரைப்படம் 2021 ஜனவரி 1 அன்று திரைக்கு வரவுள்ளதாகவும் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை ஷ்ரத்தா கபூருடன் வருண் தவான் நடித்துவரும், நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரீட் டான்ஸர் 3D திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், மிஸ்டர் லெலே திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வருணின் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை அள்ளிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ - ஃப்ளீபேக்!