திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் - மோடியிடம் கங்கனா ரனாவத் புகார் - கரண் ஜோஹர்
மும்பை: திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர்தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடியிடம் கங்கனா ரனாவத் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப்பின் சமூக வலைதளத்தில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வாரிசு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சென்று திட்டித் தீர்த்துவருகின்றனர். தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.
சுஷாந்தின் தற்கொலையை தொடர்ந்து கங்கனா ரணாவத் பாலிவுட்டில் வாரிசு பிரபலங்கள் குறித்தும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுவருகிறார்.
திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர்தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடியிடம் கங்கனா ரனாவத் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.