தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கிய கரண் ஜோஹர் - கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இயக்குநர் கரண் ஜோஹர் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

Karan Johar
Karan Johar

By

Published : May 30, 2020, 4:27 PM IST

கரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் இறங்கினார். இதற்காக ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதில், சர்வதேச நட்சத்திரங்களான ஜேசன் டெருலோ, துவா லிபா, மாலுமா, நிக்கி ஜாம் மற்றும் பெக்கி ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அர்ஜூன் கபூரையடுத்து பாலிவுட் இயக்குநர் கிரண் ஜோஹரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அர்ஜூன் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதில் நான் கலந்துகொண்டது எனக்கு பெருமை. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், முடிந்தவரை பலரை ஆதரிப்பதற்காக நிதி திரட்ட கைகோர்த்து வருகிறார்கள். மனித குலத்தை பாதுகாக்க மனிதர்கள் துணை நிற்கின்றனர் என ட்வீட் செய்திருந்தார்.

இது குறித்து கிரண் ஜோஹர் தனது சமூகவலைதளத்தில் கூறுகையில், "நாம் அனைவரும் நல்ல எதிர்காலத்தை உருவாக்க கனவு காண்கிறோம். கனவுகளை இணைப்பதற்கான ஒரு முயற்சி இது. உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஆர்வர்லர்கள் இதில் உள்ளனர். லைவ் ஸ்ட்ரீமில் ரசிகர்களும் கலந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பயன்படுத்தப்படும் என ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிங்க: 'எங்களைச் சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக இதைச் செய்கிறோம்'

ABOUT THE AUTHOR

...view details