தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கபில் தேவ் பயோபிக் படத்தில் தமிழனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா! - KABIR KHAN

கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா

By

Published : Mar 26, 2019, 7:11 PM IST

Updated : Mar 26, 2019, 7:31 PM IST

இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றுப் படம் '83' என்ற பெயரில் உருவாகிவருகிறது. கபில் தேவ் வேடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நடிக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1983 தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.'அர்ஜூன் ரெட்டி'படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்த விஜய் தேவரகொண்டா '83' படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கபீர்கான் இயக்கும் '83' படத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 15ஆம் தேதி முதல் லண்டனில் தொடங்குகிறது. மேலும்,2020 ஏப்ரல் மாதம் '83' திரைப்படம்வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மகள் அமியா துணை இயக்குநராக பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 26, 2019, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details