தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குழந்தை தத்தெடுப்பை ஊக்குவிக்கும் ரங்கோலி சண்டல் - ரங்கோலி சண்டல்

"வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை விட தத்தெடுப்பது நல்ல விஷயம். எனவே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியினர் தத்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். நான் தத்தெடுப்பதை ஊக்குவிக்கிறேன்"

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Feb 23, 2020, 10:42 AM IST

நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல் தற்போது பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க உள்ளார்.

பாலிவுட் குயின் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'தலைவி' படத்தில் நடித்துவருகிறார்.

கங்கனா ரனாவத் குறித்த எந்தொரு அப்டேட்டையும் சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு அறிவிக்கும் அவரது சகோதரி ரங்கோலி சண்டல் தனது ட்வீட்டர் பக்கத்தில் குழந்தை தத்தெடுப்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், ”எனது கணவர் அஜய் சண்டலுடன் நான் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க உள்ளேன். விரைவில் அக்குழந்தை எங்கள் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளைச்செய்துவருகிறோம். இதைச் செய்ய எங்களுக்கு கங்கனா உத்வேகம் அளித்தார். நாங்கள் தத்தெடுக்கும் பெண் குழந்தைக்கு கங்கா என கங்கனா பெயர் வைத்துள்ளார்.

எங்களுக்கு ஏற்கனவே இரண்டு வயாதகும் ப்ருத்வி என்ற மகன் உள்ளான். அவனக்குப் பெற்றோராக இருப்பது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. இருப்பினும், எனது கணவருக்கு குழந்தை ஒன்றை தத்தெடுக்க விருப்பம் இருந்தது. அதன்படி இப்போது பெண் குழந்தையைத் தத்தெடுக்க உள்ளோம்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை விட தத்தெடுப்பது நல்ல விஷயம். எனவே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியினர் தத்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். நான் தத்தெடுப்பதை ஊக்குவிக்கிறேன். பெற்றோர் இல்லாமல் ஏங்கும் குழந்தைகளுக்கு நாம் பெற்றோராக இருக்க வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த ஷில்பா ஷெட்டிக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி, ஷாரூக் கான், கவுரி கான், ஆமீர் கான், கிரண் ராவ், இயக்குநர் கரன் ஜோகர் உள்ளிட்டோர் வாடைகத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். அதேபோல் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றிருந்தாலும் நிஷா கவுர் என்னும் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார்.

இதையும் வாசிங்க: '5 வருடங்களில் 54 அறுவைசிகிச்சை; ஒட்டப்பட்ட தோலில் அரிப்பு' - ரங்கோலி சண்டல் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details