மும்பையிலுள்ள கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உள்ள 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலக பகுதி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரண்டு முறை நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி மும்பை மாநகராட்சி கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது. இது ஜனநாயகத்தின் மீறல் எனவும் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
கங்கனாவின் அலுவலகம் உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என மும்பை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 24, 2019 அன்று, நிலச் சட்டத்தை தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தீர்ப்பில், உச்சநீதிமன்றம் விதித்த சட்ட விதிகளின்படி 24 மணிநேர அறிவிப்பு வழங்கப்பட்ட உடனேயே எந்தவொரு சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்க உச்சநீதிமன்றம் பி.எம்.சிக்கு அதிகாரம் அளித்துள்ளது என பிரபல வழக்கறிஞர் வினோத் திவாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது அதேசமயம் ஜனநாயகத்தின் அடிப்படையில், கட்டிடத்தின் உரிமையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பட்சத்தில் கட்டிடம் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட உரிமையாளர் இது குறித்து மும்பை மாநகராட்சி அலுவலருக்கு பதிலளிக்கும் உரிமையும் உண்டு. அவ்வாறு அவர் கூறும் பதில் அலுவலருக்கு திருப்திகரமாக இல்லாவிட்டால் ஏழு நாள்களுக்கு அவகாசம் கொடுத்து பின் அந்த கட்டிடம் இடிக்கப்படும்.
கங்கனாவின் விஷயத்தைப் பொருத்தவரை மும்பை மாநகராட்சி 2018ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. எனக்கு அதிக நேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி இருந்தார். ஆனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லை.
தற்போது கூட கங்கனாவிற்கு அலுவலகத்தை இடிக்கும் முன்பு 24 மணி நேர கால அவகாசம் பதிலளிக்க நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து முறையான பதில்கள் வரவில்லை என்று வினோத் திவாரி கூறியுள்ளார்.
மும்பை மேற்கு பாந்த்ராவில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி ஆணையத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகள் அதிக அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.