பாலிவுட் நடிகை கங்கனா - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் உருவாகிவரும் படம் 'பங்கா'.
கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, முகேஷ் திவாரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கபடி விளையாட்டில் சாதிக்கும் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனா சுமார் இரண்டு மாதங்கள் கபடி பயிற்சியும் எடுத்து நடித்துள்ளார். கங்கனா இப்படத்தில் ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே.ஐ. பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.