தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவி' ட்ரெய்லர்: 'ஜெயா உங்களுடையவள்' - கங்கனா ட்வீட்

கங்கனா நடிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் நாளை (மார்ச் 22) வெளியாகிறது.

Kangana
Kangana

By

Published : Mar 22, 2021, 11:00 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை அதிகரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளைப் படக்குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைவி படத்தின் ட்ரெய்லரை கங்கனாவின் பிறந்தநாளான நாளை (மார்ச் 23) வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தலைவி படம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் கூறுகையில், "கோடிக்கணக்கான மக்களுக்கு முன் மாதிரியாக இருந்த ஒரு லெஜண்டின் வாழ்க்கையை தலைவி திரைப்படம் பிரதிபலிக்கும்.

ஆகவே அவருக்கான உரிய நீதியை வழங்குவது எங்களின் அடிப்படை கடமை. ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் அடையாளமாக இல்லாமல் நாடு முழுவதும் புகழ்பெற்ற ஆளுமையாக உள்ளார்.

அதனால்தான் தலைவி படத்தின் ட்ரெய்லரை பெரிய அளவில் சென்னை, மும்பையில் வெளியிடுகிறோம். தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்ற கங்கனா அவரைப் போன்றே உடல் பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.

'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைவி' ட்ரெய்லர் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ளது. தலைவி உருவாகிக் கொண்டிருந்தபோது ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடை கூடி அடுத்த சில மாதங்கள் எடை குறைத்தேன்.

இது எனக்குச் சவலாக இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் ஜெயா உங்களுடையவள் ஆகிவிடுவார் எனக் குறிப்பிட்டுள்ளார். 'மணிகர்னிகா', 'பங்கா' படங்களில் நடித்தற்காக நடிகை கங்கனா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details