தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் பி.சி. ஸ்ரீராம் - கங்கனா ரணாவத் மகிழ்ச்சி - கங்கனா ரனாவத் ட்விட்டர் பதிவு

மும்பை: தான் நடிக்கயிருந்த படத்தைப் புறக்கணித்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுக்கு கங்கனா ரணாவத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

By

Published : Sep 9, 2020, 8:59 PM IST

நடிகை கங்கனா ரணாவத் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததால், அந்தத் திரைப்படத்தை தான் நிராகரித்ததாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடிக்க இருந்ததால் அந்தத் திரைப்படத்தை நிராகரித்துவிட்டேன். ஆழ்மனதில் எனக்கு சங்கடமாக இருந்தது.

இதுகுறித்து எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களிடம் விளக்கினேன். அவர்கள் அதனைப் புரிந்துகொண்டனர். சில சமயங்களில் எது சரியானது என்று உணருவதே நல்லது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார். பி.சி. ஸ்ரீராம் எந்தத் திரைப்படத்தின் பெயரையும் சுட்டிக்காட்டவில்லை. இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இவரின் இந்தப் பதிவுக்கு கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களைப் போன்ற ஆளுமையுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். இது முற்றிலும் என்னுடைய இழப்பு. என்னைப்பற்றிய உங்களுக்கு சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் மும்பை காவல் துறையினர் குறித்தும் கூறிவரும் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details