தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விவசாயிகளால் நான்; விவசாயிகளுக்காக நான்: பல்டி அடித்த கங்கனா! - விவசாயிகள் போராட்டம்

போராட்டக்காரர்களை நக்கல் செய்த கங்கனாவுக்கு பஞ்சாபை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், கங்கனா அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Dec 4, 2020, 5:01 PM IST

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவரை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பில்கிஸ் பானு என வதந்தி பரப்பி ட்வீட் செய்தார். பஞ்சாப் பாடகர் டிலிஜித் தோசஞ் இது தொடர்பாக கங்கனாவை சாடி, ஆதாரம் கேட்டு பதிவிட்டிருந்தார். ட்விட்டரில் கங்கனாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சில மணி நேரங்களிலேயே கங்கனா அந்த ட்வீட்டை டெலிட் செய்தார்.

Diljit Dosanjh tweet

போராட்டக்காரர்களை நக்கல் செய்த கங்கனாவுக்கு பஞ்சாபை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், கங்கனா அந்தர் பல்டி அடித்திருக்கிறார். ஆம், தான் விவசாயிகள் பக்கம் என அவர் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர், நான் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். நான் எப்போதும் விவசாயிகள் பக்கம். விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்டதுதான் இந்த புரட்சிகர வேளாண் திட்டம். விவசாயிகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், கம்யூனிஸ்ட்டுகளையும் காலிஸ்தானியர்களையும் உங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவிடாதீர்கள். உங்களுக்கு சாதகமான முடிவு வரும். ஜெய் ஹிந்த் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இசைவாணியை வாழ்த்திய இசைஞானி!

ABOUT THE AUTHOR

...view details