இந்திய விமானப் படையின் முன்னாள் விமானி குஞ்சன் சாக்சேனாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. கார்கில் போரில் பங்கேற்ற குஞ்சன் சாக்சேனாவின் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கரண் ஜோகர் தயாரித்திருந்தார். இதில் இந்திய விமானப் படையைப் பற்றியும், ராணுவம் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இது பற்றி கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
குஞ்சன் சாக்சேனா சர்ச்சை: கரண் ஜோகரை விமர்சித்த கங்கனா
குஞ்சன் சாக்சேனா படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரனாவத், அதன் தயாரிப்பாளர் கரண் ஜோகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த வகையில் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தேசியவாதத்துக்குள் குதிக்க விரும்புகிறோம். ஆனால், தேசப்பற்றை காட்ட மறுக்கிறோம். பாகிஸ்தான் உடனான போர் குறித்த திரைப்படத்தில் கூட இந்தியர்களே வில்லனாக காட்டப்படுகின்றனர். தற்போது மூன்றாம் பாலினத்தவரும் ராணுவத்தில் நுழைந்துவிட்டார்கள். ராணுவ வீரர் என்பவர் ராணுவ வீரர் மட்டுமே என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள் கரண் ஜோகர் என குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா மட்டுமில்லாது சமூக வலைதளங்களில் பலரும் கரண் ஜோகரை விமர்சித்து வருகின்றனர்.