கங்கனா ரணாவத் தற்போது தனது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கிருந்தவாறே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வருகிறார்.
கங்கனா ரணாவத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பு! - கங்கனா ரனாவத் மத்திய அரசு பாதுகாப்பு
மும்பை: நடிகை கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு 'Y பிளஸ்' பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை கங்கனா ரணாவத் பகிர்ந்து வந்த நிலையில், அவருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா, ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆகிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது கங்கனாவுக்கு எதிராக மும்பை, தானே, பால்கர், புனே, அவுரங்காபாத், நாசிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
பால்கர் சாதுக்கள் கொலை சம்பவம் குறித்து, "மும்பை, ரத்தத்திற்கு அடிமையாகி உள்ளது" என முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தை கங்கனா அவமானப்படுத்தி விட்டார். அவர் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.