தமிழில் ஜெயம் ரவியுடன் 'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பம்ப்லா (Bhambla) நகரத்தில் பிறந்தார். கங்கனா குழந்தை பருவம் முதலே யாரையும் சாரமல் சுயமாக வாழும் மனநிலையில் வளர்ந்துள்ளார். இந்த மனநிலைதான் அவர் 16 வயதில் பம்ப்லாவிலிருந்து கிளம்பி டெல்லியில் வந்து தனியாக வாழ உத்வேகம் அளித்துள்ளது.
இன்று பாலிவுட் ராணியாக கங்கனா வலம் வந்தாலும் பாலிவுட்டில் இவர் முதலில் கால் எடுத்து வைக்க மிகவும் கஷ்டபட்டுள்ளார். பின் 2006 ஆம் ஆண்டு இயக்குநர் அனுராக் பாசுவின் இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ்டர்' படத்தின் மூலம் அறிமுகமானர். முதலில் இப்படத்தில் வேறு ஒருவர் நடிக்க இருந்த நிலையில், அவரால் நடிக்க முடியாமல் போக இறுதியாக கங்கனாவிடம் அரிய வாய்ப்பு வந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு விகாஸ் பஹ்ல் இயக்கத்தில் வெளியான க்யூன் படம் இவரது சினிமா வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பொதுவாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் ரசிக்க செய்யும். க்யூன் கதாபாத்திரத்தின் எளிமை, அவரது அப்பாவி தனமான முகபாவனை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கங்கனா பாலிவுட் ராணியாக வலம் வந்தாலும் சர்ச்சைக்கும் இவரை குறித்த வதந்திக்கும் பஞ்சம் கிடையாது. பாலிவுட்டில் இவர் இருக்கும் சிம்மஹாசனம் மென்மையானதாக இருப்பது கிடையாது. ஹருத்திக் ரோஷனுடனா நட்பு, சமீபத்தில் செக்ஸ் குறித்த இவரது கருத்து போன்றவை பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதையெல்லாம் கடந்து தனது கடின உழைப்பும் அர்பணிப்புடன் தனது வேலைகளை செய்து வருவதால் பாலிவுட்டின் முன்னணி நடிககையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.