தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன் - கங்கனா ரணாவத் - ரித்திக் ரோஷனை காதலித்த கங்கனா

மும்பை: ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன் என்றும் அவர் தற்போது என்னிடம் ஒரு எதிரியைப் போல் நடந்துகொள்கிறார் எனவும் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

By

Published : Aug 21, 2020, 2:02 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப்பின் சமூக வலைதளத்தில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வாரிசு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சென்று திட்டித் தீர்த்துவருகின்றனர். தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் பாலிவுட்டில் வாரிசு பிரபலங்கள் குறித்தும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுவருகிறார்.

இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு வெளியான 'கேதர்நாத்' படப்பிடிப்பின்போது சுஷாந்த் சிங்கும் சாரா அலிகானும் காதலித்து வந்ததாகவும் பின்னர் அக்காதல் இடையில் முடிந்துவிட்டதாகவும் சில தினங்களாக சமூகவலைதளத்தில் செய்திகள் பரவிவருகின்றன. எனவே சிபிஐ இது குறித்து சாரா அலிகானிடமும் விசாரணை நடத்த வேண்டுமென நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

தற்போது இது குறித்து கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுஷாந்த் - சாரா குறித்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் அப்போது வெளியாகின. ஏன் இந்த வாரிசு குழந்தைகள் வெளியிலிருந்து வரும் நடிகருக்கு இப்படி ஆசைகாட்டி மோசம் செய்கிறார்கள்? அதன் பிறகு ஏன் சுஷாந்த் ஒரு பிணந்தின்னி கழுகிடம் மாட்டிக்கொண்டார். என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சாரா அவரை உண்மையாகவே காதலித்து இருப்பார் என்றே நான் நம்புகிறேன். சுஷாந்த் ஒரு பெண் தன்னிடம் உண்மையாக இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைக்கூட அறியாத அளவுக்கு முட்டாள் இல்லை. சாராவுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடும். நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் இப்போது ஏன் என்னிடம் ஒரு எதிரியைப் போல் நடந்துகொள்கிறார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப்பதிவில், வாரிசு குழந்தையாக சாரா அலி கானையும், பிணந்தின்னி கழுகு என ரியாவையும் கங்கனா குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.மேலும் ஹிருத்திக் ரோஷனின் பெயரை கங்கனா இதில் பயன்படுத்தி இருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். உங்களது பப்ளிசிட்டிக்காக அடுத்தவருடைய பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details