தமிழில் 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமான ’தலைவி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டில் கங்கனா அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், தன் திரையுலக வாழ்வின் மறக்க இயலாத தருணங்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட்டில் கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் அறிமுகமான கங்கனா, தான் முதன்முதலாக சிறந்த நடிகைக்கான விருது பெற்றதையும், பொருளாதார நெருக்கடியால் விருது பெற சிங்கப்பூர் செல்ல முடியாததால், அவரின் நண்பர் அவருக்குப் பதிலாக அவ்விருதினை பெற்று வந்ததையும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்த 14 வருடங்களில் ஃபேஷன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை, குயின், தனு வெட்ஸ் மனு திரைப்படங்களுக்காக சிறந்த நடிகை என மொத்தம் மூன்று தேசிய விருதுகளும், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ பட்டமும் கங்கனா பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:'நல்லோர் சிந்தனைகளைப் படிக்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை'- சூர்யா