இந்தியில் தேவ் டி, கல்லி பாய், யெ ஜவானி ஹெய் திவானி என பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின். இவர் சமீபத்தில் தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை கல்கி கோச்சலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இது அப்போது சமூகவலைதளத்தில் வைரலானது. அதுமட்டுமல்லாது தனது குழந்தையை வாட்டர் பாத் முறையில் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் சமூகத்திற்காக வேக வேகமாக திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை எனவும் கருத்து பதிவிட்டு இணையத்தில் விவாத பொருளாக மாறினார்.
இதனையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அந்த குழந்தைக்கு சப்போ என பெயர் வைத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கல்கி கோச்சலின் கூறுகையில், சப்போவை அன்புடன் வரவேற்கிறேன். 9 மாதங்கள் அவள் என் கருப்பையில் மோமோ போன்று இருந்தாள். தற்போது அவளுக்கான இடத்தை கொடுப்போம். என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. கர்பிணி பெண்களுக்கு எப்போதும் இந்த சமூகம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். இது பெண்களின் ஒரு கடமை மட்டுமல்ல. இது அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சேலஞ்ச் ஆகும். பிரசவம் என்னும் போரில் ஒவ்வொரு பெண்ணும் தப்பி பிழைப்பது மிகப்பெரிய சவால். எனவே அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் அரவணையுங்கள் என்று அதில் கூறியுள்ளார்.மேலும் இந்த போஸ்டுடன் இரண்டு கால் தடங்கள் பதிந்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:தல படத்தில் குத்தாட்டம் போட வரும் பாலிவுட் நடிகை!