கரோனா தொற்று மக்களை அச்சுறுத்தலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. இந்நேரத்தில் வெளி ஊர்களிலும் வெளி மாநிலங்களிலும் இருக்கும் மக்கள் தங்கள் உறவினரை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த கரோனா அச்சுறுத்தல் திரை பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது நடிகை கஜோலின் இன்ஸ்டாகிராம் பதிவு.
அந்தப் பதிவில் தனது தாயும் மூத்த நடிகையுமான தனுஜாவை இந்த ஊரடங்கு நேரத்தில் மிஸ் செய்வதாக கஜோல் தெரிவித்திருந்தார். அதோடு கஜோலும் அவரது தாயாரும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் 'ஃப்ளாஷ்பேக் வெள்ளிக்கிழமை... என் தாயாரை மிஸ் செய்கிறேன். இது எங்களுடைய 45ஆவது நாள் நிறைவு' என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க... ராஜமெளலியை தூங்க வைத்த 'பாராசைட்': நெட்டிசன்கள் கொதிப்பு